வாஷிங்டன் :அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, டிரம்ப் நிர்வாகம் முன்னர் விதித்த சில இறக்குமதி வரிகளை ரத்து செய்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்காவில் ஏற்கனவே இருந்த 18% வரி 10%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரம்ப் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து, புதிய அதிரடி முடிவு எடுத்துள்ளார்.டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த அறிக்கையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாட்டின் நலனுக்கு எதிரானது.
தீர்ப்பளித்த நீதிபதிகளை நான் மிகவும் வெட்கப்படுகிறேன்” என்று கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க வர்த்தக விரிவாக்க சட்டத்தின் கீழ், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.1974ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ஐ பயன்படுத்தி, ஏற்கனவே உள்ள வரிகளுடன் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்த சட்டம் அரசுக்கு 150 நாட்கள் வரை 15% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. இந்த புதிய 10% வரி சுமார் 3 நாட்களில் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தபோதிலும், அரசியல் ரீதியாக மாற்று வழிகள் உள்ளதாக டிரம்ப் வாதிட்டார். “நான் விதித்த வரி விதிப்புகள் முழு வேகத்தில் தொடரும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இந்த முடிவு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்றுமதி பொருள்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.ஒட்டுமொத்தமாக, அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால் 18%லிருந்து 10%ஆக குறைந்த வரி, டிரம்பின் புதிய 10% கூடுதல் வரி மூலம் மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வர்த்தக வட்டாரங்களில் கவலை நிலவுகிறது. டிரம்பின் இந்த அதிரடி முடிவு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
