மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி சுட்ட தந்தை…!

மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி தந்தை சிகரெட்டை நோக்கி சுட்டுள்ளார்.
ஈராக்கியர் ஒருவர் தனது துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனது மகனின் வாயில் வைத்திருந்த சிகரெட்டை ஏகே 47 மூலம் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த நபர் தனது மகனை வாயில் சிகரெட்டைப் பிடிக்கச் சொல்வதைக் காணலாம். பின்னர் அவர் சிகரெட்டை குறிவைத்து, சிகரெட்டை நோக்கி சுட்டார். அந்த நபர் சிகரெட்டை சுட்டுவிட்டு தனது துல்லியத்தை பற்றி பெருமையாக கூறினார். மனித உரிமைகளுக்கான ஈராக் கண்காணிப்பகம் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டது.
இதுகுறித்து இணையவாசிகள் தனது தகுதியை நிரூபிக்க ஒரு குழந்தையின் உயிரைப் பணயம் வைக்கிறார். நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன், அந்த நபரை நீதியின் முன் நிறுத்துமாறு கோரியுள்ளனர். ஆனால், அந்த நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025