சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை பிடிப்பதற்காக பனந்தோப்பு சென்ற போலீசாரை, அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை காலில் சுட்டு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் டித்துள்ளார். இன்று அதிகாலையில் பொது இடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சோனாமர்க் : ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககன்கிர் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 2 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், இரண்டு தொழிலாளர்கள் […]
திருச்சியில் 11 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (30) என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சனமங்கலம் பகுதியில் ஜெகனை பிடிக்க முயன்றபோது எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெகனை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் […]
மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி தந்தை சிகரெட்டை நோக்கி சுட்டுள்ளார். ஈராக்கியர் ஒருவர் தனது துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனது மகனின் வாயில் வைத்திருந்த சிகரெட்டை ஏகே 47 மூலம் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் தனது மகனை வாயில் சிகரெட்டைப் பிடிக்கச் சொல்வதைக் காணலாம். பின்னர் அவர் சிகரெட்டை குறிவைத்து, சிகரெட்டை […]
ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர். ஜம்மு – காஷ்மீரில் சமீப நாட்களாக ட்ரோன்கள் பறப்பது வழக்கமாகி உள்ளது. ஆனால்,பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு, ட்ரோன்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். வெடிபொருளுடன் பறந்த ட்ரோன் ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள, கனச்சக் என்ற இடத்தில் வெடிபொருள்களுடன் ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இந்த ட்ரொனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ட்ரோன் நடமாட்டத்தின் பின்னணி சுட்டு […]
முகக்கவசம் அணியாததால் ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி பாதுகாவலர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில், பரேலியில் ராஜேஷ் என்ற ரயில்வே ஊழியர் ஒருவர் பரோடா வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு […]
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் என்னும் நகரில் இன்று போலியோ தடுப்பூசி வழங்கக்கூடிய ஊழியர்கள் முகாம் அமைத்து போலியோ தடுப்பூசி செலுத்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், […]
மத்திய பிரதேசத்தில் தனது மனைவியை கடித்து குதறிய நாயை துப்பாக்கி வைத்து சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எடுத்த சுதாமா எனும் நகரில் வசித்து வரக்கூடிய நரேந்திர விஷ்னோய் என்பவரின் மனைவியை அவரது அண்டை வீட்டுக்காரரான மருத்துவர் வினித் என்பவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. நாய் கடித்ததால் வலி தாங்காமல் விஷ்னோய் மனைவி அலறி துடித்து வீட்டிற்குள் வந்துள்ளார். அதைப் பார்த்து […]
உத்திர பிரதேச மாநிலத்தில், 35 வயதுடைய தனது கூட்டாளியை பண பிரச்சனை காரணமாக சுட்டு கொன்றவர் கைது. தற்போதைய காலகட்டத்தில் பணத்திற்காகவும், சொத்திற்காகவும் உடன் பிறந்த சகோதரர்களை கொலை செய்பவர்களே அதிகரித்து விட்ட நிலையில், நண்பன் மற்றும் விதி விளக்கா என்ன? உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் கூட்டாளிகளாக சேர்ந்து பணியாற்றிய ஒருவரை மற்றவர் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முர்ஷத்பூர் எனும் வனப்பகுதிக்கு தனது கூட்டாளி அடாய் முரத்பூரில் வசிக்கும் 35 வயதுடைய ஹேம்சந்த் […]
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய -சீனா எல்லையில் நிலவும் பதற்றம் ஒரு புறம் என்றால் மறுபுறமோ பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டுழியம் கால்வான் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது என்ன தான் நடக்க போகிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் சற்று ஒய்ந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்.இந்த […]
ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் […]