அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு;6 பேர் உயிரிழப்பு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினவிழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,அதன் ஒரு பகுதியாக சிகாகோவின் ஹைலேண்ட் பார்க் பகுதியில் நேற்று(ஜூலை 4) நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு பலர் சுடப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் இறந்துவிட்டதாகவும்,மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில்,அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து,ஹைலேண்ட் பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்திற்குறிய நபர் ஒருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.அந்த நபர் 22 வயதுடையவர் எனவும்,அவர் பெயர் ராபர்ட் “பாபி” இ. கிரிமோ என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
unknown node