பாலியல் புகார் விவகாரம் – ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரிய முன்னாள் மாடல் அழகி!

Former US model Katherine Majorca has demanded Rs 580 crore in compensation from Ronaldo for allegedly raping her in 2009.

2009ஆம் ஆண்டு தன்னை கற்பழித்ததாக கூறிய முன்னாள் அமெரிக்க மாடல் கேத்ரின் மயோர்கா ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரியுள்ளார்.

போர்ச்சுக்கல்லின் புகழ்பெற்ற கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கேத்ரின் மயோர்கா எனும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி கேத்ரின் மயோர்காவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அமெரிக்க முன்னால் மாடல் அழகி கேத்ரின் மயோர்கா அவர்கள் தனக்கு ரொனால்டோ பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக பணம் ஒப்பந்தம் செய்தார் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மயோர்கா இது குறித்து பேசியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க மாடல் மயோர்கா அவர்கள், ரொனால்டோ தனக்கு 580 கோடி இழப்பீடு வேண்டும் என கோரியுள்ளார். அதாவது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாற்காகவும், தனது கடந்த கால மற்றும் எதிர்காலத்தில் தனக்கு உள்ள அவமானத்திற்க்காகவும் இந்த தொகையை கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.