ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல. ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் […]
திருமணமான மகள்கள், விபத்துகளில் பெற்றோரை இழந்தால் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு பெற உரிமை உண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏப்ரல் 12, 2012 அன்று ஹுப்பள்ளி, யமனூர் அருகே விபத்தில் உயிரிழந்த ரேணுகா (வயது 57) என்பவரின் திருமணமான மகள்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எச்.பி.சந்தேஷ் தலைமையிலான உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரித்தது. ரேணுகாவின் கணவர், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் […]
மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதில் இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதனிடையே பேசிய அமைச்சர், மதுபானம் பார் டெண்டர் விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை, வெளிப்படைத்தன்மையுடன் தான் டெண்டர் கோரப்பட்டது. டாஸ்மாக் பார் டெண்டர் […]
வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு […]
2009ஆம் ஆண்டு தன்னை கற்பழித்ததாக கூறிய முன்னாள் அமெரிக்க மாடல் கேத்ரின் மயோர்கா ரொனால்டோவிடம் 580 கோடி இழப்பீடு கோரியுள்ளார். போர்ச்சுக்கல்லின் புகழ்பெற்ற கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கேத்ரின் மயோர்கா எனும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி கேத்ரின் மயோர்காவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அமெரிக்க முன்னால் மாடல் அழகி கேத்ரின் மயோர்கா அவர்கள் தனக்கு ரொனால்டோ பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதை […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 70 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் […]
விமானத்தில் கொசுக்கள்… பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு இந்தியா: விமானத்தில் கொசுக்கள் இருந்ததாக புகார் கொடுத்த பயணிகள் மூவருக்கும், ஆளுக்கு சுமார் 800 வெள்ளி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமிர்தசரஸ் பயனீட்டாளர் குறைதீர் நிலையம் உத்தரவிட்டுள்ளது. வழக்குரைஞராக இருக்கும் பயணிகள் மூவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலையம் அவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் டில்லி விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ் சென்ற IndiGo விமானத்தில் கொசுக்கள் மொய்த்தததாக வழக்குரைஞர்களான பயணிகள் மூவரும் அதிகாரிகளிடம் புகார் […]