ஜப்பானில் பொது இடத்தில் புகைபிடித்தல் ரூ.2 லட்சம் அபராதம் !

ஜப்பானில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து அங்கு புகைபிடிப்பதற்கு எதிராக பிரசாரம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜப்பானில் நேற்று புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின் படி பள்ளிக்கூடங்கள் ,மருத்துவமனைகள் ,அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.பள்ளிக்கூடங்கள் , மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
இந்த சட்டத்தை பின்பற்றவில்லையென்றால் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென் (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்.அதேபோல இந்த சட்டத்தை மீறும் நபருக்கு 3 லட்சம் யென் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து) அபராதம் விதிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025