பிரான்ஸில் எலிசா (29) என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்து உள்ளார்.இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் ரெட்ஸ் வனப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு உள்ளார்.அப்போது வேட்டை நாய்கள் கூட்டமாக வந்து எலிசாவை கடித்து உள்ளது.இதை தொடர்ந்து எலிசா தனது கணவருக்கு போன் மூலமாக அழைத்து தன்னை வேட்டை நாய்கள் கூட்டமாக தாக்கியதாக கூறியுள்ளார்.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற எலிசாவின் கணவர் இரத்த வெள்ளத்தில் எலிசா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
unknown nodeபின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த போலீசார் எலிசாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனையில் 30 க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் எலிசாவின் உடல் , கை , கால் மற்றும் தலையில் கடித்ததால் தான் அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.