அமெரிக்காவில் விமான விபத்து – 3 பேர் உயிரிழப்பு...!

Three killed in Beachcraft C23 plane crash in US

அமெரிக்காவில்  பீச் கிராஃப்ட் சி23 எனும் விமானம் விபத்துக்குள்ளாக்கியத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் மேற்கு வெர்ஜினியா பகுதியில் நேற்று காலை  பீச் கிராஃப்ட் சி23  எனும் சிறிய வகை விமானம் பாயெட் எனும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் சார்லஸ்டனுக்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவில் உள்ள நியூ ரிவர் கோர்ஜிலிருந்து சில மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது.

எனவே, இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் விமான விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்துக்குள் இருந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நிக் பிளெட்சர், 36 வயதுடைய மைக்கேல் டாப்ஹவுஸ் மற்றும் 39 வயதுடைய வெஸ்லி பார்லி ஆகியோர் தான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.