மனிதனைப் போன்று பற்கள் கொண்ட மீன் – வைரலாகும் புகைப்படம்..!

Photos of a fish with human-like teeth caught in the United States are currently going viral on the internet.

அமெரிக்காவில் பிடிபட்ட மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படங்கள்,தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள ஒரு மீனவர் ஆகஸ்ட் 3 ம் தேதி மனிதனைப் போன்று பற்களைக் கொண்ட ஒரு மீனைப் பிடித்துள்ளார்.இந்த மீன் ஒரு செம்மறி மீன்(sheepshead fish) என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இரையை நசுக்குவதற்கு பல வரிசை பற்களைக் கொண்டுள்ளது.மேலும்,ஆட்டின் வாய்ப்பகுதியை போல்,இவ்வகை மீனின் வாய்ப்பகுதி இருப்பதால் அதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான பற்களை கொண்ட  மீன்கள் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரைக பகுதிகளில் அரிதாக காணப்படுகின்றன.மேலும்,இந்த மீன்கள் சுமார் 10 – 20 அங்குலம் வளரக் கூடியது.

இந்த மீனின் புகைப்படத்தை,ஜென்னட்டின் பியர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

unknown node