கால்வாயில் விழுந்த பாகிஸ்தான் பயணிகள் வேன் – 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!

At least 11 people, including seven children, were killed when a passenger van plunged into a canal in Pakistan.

பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஒன்று கால்வாயில் விழுந்த நிலையில், இதில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா எனும் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர் உறவினர்களை சந்திப்பதற்காக வேன் ஒன்றில் சென்றுள்ளனர். அதன் பின் உறவினர்களை சந்தித்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களது வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா எனும் மாவட்டத்தில் உள்ள கான்குவா டோக்கன் எனும் பகுதியில் வந்தபோது அங்கு இருந்த கால்வாயில் எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விழுந்து உள்ளது.

அப்பொழுது அதிலிருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைவரும் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து நீரில் மூழ்கியதில் 7 குழந்தைகள் உட்படமொத்தம் பதினொரு பேர் பலியாகியுள்ளனர். ஓட்டுநர் வேனை மிக வேகமாக ஓட்டி சென்றதால் உடனடியாக நிறுத்த முடியவில்லை எனவும், இதனால் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் விழுந்து விட்டது எனவும் அந்த சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் கூறியுள்ளார். தற்பொழுது இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.