லாட்டரியில் விழுந்த ரூ.188 கோடி!அதனை வாங்க முடியாமல் தவிக்கும் பெண்..!

Lottery jackpot 'winner' says she destroyed $26m worth Lottery ticket in laundry wash.

அமெரிக்காவில்,லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் அதனை பெற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.

அமெரிக்காவின்,கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் ஒரு பெண்,அங்குள்ள ஒரு லாட்டரி கடையில் ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ என்ற லாட்டரியினை வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,அந்த பெண் வாங்கிய ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ லாட்டரிக்கு கடந்த வியாழக்கிழமையன்று 26 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.188 கோடி) பரிசுத் தொகை விழுந்தது.

இதனையடுத்து,அப்பெண்ணுக்கு பரிசுத் தொகை பற்றிய விவரம் தெரிய வந்தது.எனவே,தான் வாங்கிய லாட்டரி சீட்டை தேடியுள்ளார்.ஆனால்,துணி துவைக்கும் போது தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அந்த லாட்டரியையும் சேர்த்து துவைத்துள்ளார் என்பது அப்பெண்ணுக்கு சிறிது நேரம் கழித்துதான் தெரிய வந்தது.எனவே,தான் லாட்டரி வாங்கிய கடைக்கு நேரடியாகச் சென்று நடந்த விபரத்தை கூறியுள்ளார்.மேலும்,லாட்டரி வாங்கிய சிசிடிவி பதிவை காண்பித்து பரிசுத் தொகையை கேட்டுள்ளார்.

ஆனால்,அந்த கடை ஊழியர் ஒருவர் லாட்டரி இருந்தால்தான் பரிசுத் தொகை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.இதனால்,அப்பெண் செய்வதறியாது திகைத்து உள்ளார்.