மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!

கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது  மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென்  (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள். இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் … Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.? 

Hunter Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, … Read more

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 2 பேர் பலி மற்றும் 11 பேர் காயம்.!

கலிபோர்னியாவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலி மற்றும் 11 பேர் காயமடைந்தனர். வடக்கு கலிபோர்னியாவில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவில் 6.4 என பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி முழுதும் மின்சாரம் தடைபட்டுள்ளது, இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். … Read more

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள எல்லை பகுதியில் வேலி மீது ஏறி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த குடிமக்கள் மொத்தம் 100 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் சான் டியாகோ செக்டார் பார்டர் ரோந்து அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 100 பேர் கொண்ட இந்த புலம்பெயர்ந்தோர் குழுவில் 17 பேர் இந்திய குடிமக்கள் … Read more

கலிபோர்னியா காட்டு தீ : 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம்…!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் பரவி வரக்கூடிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது, இது  வனப்பகுதியில் 32% எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தீயின் காரணமாக இதுவரை 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், ஒன்பது கட்டிடங்கள் … Read more

கரடியை எதிர்த்த துணிச்சல் சிறுமி..!

தான் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற சிறுமி ஒருவர் கரடியுடன் போராடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் சிறுமி செல்லமாக வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 17.  இவரது வீட்டில் உள்ள சுவற்றில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் நடந்து சென்றுள்ளது. அப்போது வீட்டில் வளர்த்த நாய்கள் அனைத்தும் கரடியை பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கரடி நாய்குட்டிகளை தாக்கவும் வந்துள்ளது. நாய்களின் சத்தத்தால் வெளியே வந்து பார்த்த சிறுமி, நாய்க்குட்டிகளை … Read more

லாட்டரியில் விழுந்த ரூ.188 கோடி!அதனை வாங்க முடியாமல் தவிக்கும் பெண்..!

அமெரிக்காவில்,லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் அதனை பெற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார். அமெரிக்காவின்,கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் ஒரு பெண்,அங்குள்ள ஒரு லாட்டரி கடையில் ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ என்ற லாட்டரியினை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,அந்த பெண் வாங்கிய ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ லாட்டரிக்கு கடந்த வியாழக்கிழமையன்று 26 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.188 கோடி) பரிசுத் தொகை விழுந்தது. இதனையடுத்து,அப்பெண்ணுக்கு பரிசுத் தொகை பற்றிய விவரம் தெரிய வந்தது.எனவே,தான் வாங்கிய லாட்டரி சீட்டை … Read more

“பல வருடங்களாக இருளில் மட்டுமே வாழும் அதிசயப் பெண்..!”

கலிஃபோர்னியாவில்,ஆன்ட்ரியா என்ற இளம்பெண் ஜெரோடெர்மா பிக்மென்டோசம் என்ற ஒரு அரிய வகை தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக இருளில் மட்டுமே வாழ்ந்து வருகிறார். கலிஃபோர்னியாவில் வசிக்கும் 28 வயதான ஆன்ட்ரியா என்ற பெண் ஒருவர் ஹாலிவுட் படங்களில் வரும் இரத்த காட்டேரி போன்று சூரிய ஒளி படாமல் பல ஆண்டுகளாக இருட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்.இதற்கு காரணம், ஜெரோடெர்மா பிக்மென்டோசம்(Xeroderma Pigmentosum) என்ற தோல் நோயால் ஆன்ட்ரியா பாதிக்கப்பட்டுள்ளார். ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் என்ற தோல் புற்றுநோயானது, … Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தி போராட்டம்.!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமெரிக்கர்கள் கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா , குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 11-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு சில எதிர் கட்சிகள் ஆதரவு … Read more

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ…தீயை அணைக்க போராட்டம் 1,800 வீரர்கள்.!

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயை கட்டுபடுத்த போராடும் 1,800 தீயணைப்பு வீரர்கள்.  அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ புதிதாக பல்வேறு வனப்பகுதிகளில் பரவுவதாகவும், அதனை கட்டுபடுத்த வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நீரை ஊற்றி தீயை அணைக்கு பணிகளும் நடந்து வருகிறது. இதுவரை, 27 ஆயிரத்து 800 ஏக்கர் வன பகுதி தீயில் … Read more