ஸ்போர்ட்ஸ்-க்கென தனி ஆப்! அமேசான் திட்டம்.!
விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதெற்கென அமேசான் தனி ஆப்-ஐ அறிமுகப்படுத்துகிறது.
உலகின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம், விளையாட்டுப்போட்டிகளை பார்ப்பதற்காக அமேசானில் பிரத்யேக ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே அமேசான் ப்ரைம் தளம் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை காண்பிக்கும் தளமாக நடைமுறையில் இருக்கிறது.
அமேசான் நிறுவனம் தற்போது நேஷனல் கால்பந்து லீக்கின் கால்பந்து உரிமை மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் போன்ற விளையாட்டுகளை ஸ்ட்ரீம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இது தவிர, நேரலையிலும் விளையாட்டுகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை விரைவில் அமேசான் பெறும் என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி மேலும் கூறினார்.