ட்விட்டரின் ப்ளூ டிக் அம்சத்திற்கு விலையை அறிவித்த எலான் மஸ்க்.!

ட்விட்டரில் "ப்ளூ டிக்" அம்சம் வைத்திருப்பதற்கு மாதத்திற்கு இனி $8 செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் “ப்ளூ டிக்” அம்சம் வைத்திருப்பதற்கு மாதத்திற்கு இனி $8 செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரின் புதிய நிறுவனரான எலான் மஸ்க் கடந்த வாரம் நடந்த ஒப்பந்தத்தின் முடிவில் வெற்றிகரமாக ட்விட்டரை தன் வசம் ஆக்கினார். அதன் பிறகு வந்த தகவலின் படி “ப்ளூ டிக்” எனும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருப்பதற்கு மாதம் $20 வரை வசூலிக்கப்படும் என்று இருந்த நிலையில் தற்போது அதன் நிறுவனர் மஸ்க் மாதம் $8 செலுத்த வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறியதாவது, இந்த விலை நாட்டின் வாங்கும் திறன் சமநிலைக்கு ஏற்றவாறு சரிசெய்யப்படுகிறது. அதிகாரம் மக்களிடம், ப்ளூ டிக் $8/மாதத்திற்கு! என்று அவர் ட்விட்டரில் பகிர்ந்தார்.

unknown node