இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்! பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!

Boris Johnson, the Prime Minister of the United Kingdom, has said that there is a need for "drastic action".

பல விதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று இங்கிலாந்து பிராத்தமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, போன்ற நாடுகள் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகம் வீரியமிக்க புதிய வகை வைரஸ் அங்கு தீவிரமாக பரவி வருகிறது.  இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என ஆசிரியர் சங்கம்  அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக படலாம் என்றும் எச்சரித்தார். அடுத்த சில வாரங்களில் நாம் கடினமான காரியங்களை செய்ய வேண்டியிருக்கலாம் என்றும், பல விதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.