புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விமான போக்குவரத்திற்கு தடை!

Germany, Turkey, Israel, Switzerland and Saudi Arabia have banned air traffic to reduce the spread of the new type of corona.

புதிய வகை கொரோனா பரவலைக் குறைக்க ஜெர்மனி, துருக்கி, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரொனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பிரிட்டன் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால், பிரிட்டன் அரசு விமான போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் ரத்து  செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் புதிய வகை பரவலைக் குறைக்க ஜெர்மனி, துருக்கி, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.