சமீபத்தில் மத்திய அரசு சில திருத்தங்களுடன் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பாதல் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், தமிழத்தில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையெடுத்து, கோவை அரசு ஆரம்பப் பள்ளியில் 3-வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால், இந்தி மொழி கட்டாய பாடமா..? என்று கேள்வி எழுந்துள்ளது.