காஞ்சிபுரம் அருகே சோகம்..விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..! 

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை கிராமத்தில் சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 2 பேர் முயன்று  உள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் இருவரும்

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை கிராமத்தில் சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 2 பேர் முயன்று  உள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.