Corona Virus : திருப்பூரில் 114 பேரில் 112 பேர் குணமடைந்தனர் ! – திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114 பேரில் 112 பேர் குணமடைந்துள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்.

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114 பேரில் 112 பேர் குணமடைந்துள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்.

தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பின்னலாடை நகரமான திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114 பேரில் 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மீதமுள்ள இரண்டு பேரும் நிதானமாக இருப்பதாகவும் 1121 நபர்களை வீட்டில் வைத்து கண்காணித்து வருவதாக பதிவிட்டுள்ளார். திருப்பூரில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
Corona Virus : திருப்பூரில் 114 பேரில் 112 பேர் குணமடைந்தனர் ! – திருப்பூர் மாவட்ட ஆட்சியர்