9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆபத்தில் உள்ளது பற்றி நீங்கள் கவலை கொள்ளவில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கு இன்று காலையில் இருந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, கொரோனா உச்சம் அக்டோபர், நவம்பரில் அதிகமாகும் என சொல்கிறார்கள் எனவே சரியான நேரத்தில் தான் தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆபத்தில் உள்ளது பற்றி நீங்கள் கவலை கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பினர்.
இறுதியாக, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.