ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எனது தந்தையின் ஆலோசகர் என்பது தவறான செய்தி – தயாநிதிமாறன்!

The false news is that Arjunamurthy, who has been announced as the coordinator of the Rajini Party, is an advisor to Murosoli Maran.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி என்பவர் எனது தந்தை முரோசொலி மாறனின் ஆலோசகர் என்பது தவறான செய்தி என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

ரஜினி அவர்கள் வருகின்ற ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பரையும் நியமித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி அவர்கள் முன்னாள் பாஜக நிர்வாகி மட்டுமல்லாமல், மறைந்த முரொசொலி மாறனுடைய ஆலோசகராகவும் பணியாற்றியவர் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், இது குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.அர்ஜுனமூர்த்தி அவர்கள் மறைந்த எனது தந்தை முரசொலி மாறனின் ஆலோசகராக பணியாற்றியவர் என சில சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்தி தவறானது. இது முற்றிலும் பொய், எனது தந்தைக்கு எவரும் ஆலோசகராக இருந்ததில்லை, இது போன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.