#Breaking:அடுத்த மூன்று மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

The Chennai Meteorological Department has forecast thundershowers in 27 districts of Tamil Nadu in the next three hours.

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் சமீப காலமாகவே தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node
#Breaking:அடுத்த மூன்று மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!