அமைச்சர்களாக பதவி ஏற்கும் 23 பேர் யார்? யார்? புதிய பட்டியல் வெளியீடு…!

தமிழக அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள 23 பேரின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, அமைச்சரவையை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான இறுதி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏக்களும், கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்தும் வகையிலும், மாவட்ட வாரியான பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்தும் வகையிலும் இந்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத், அவிநாசி தொகுதியைச் சேர்ந்த எஸ். கமலி, குமாரபாளையம் தொகுதியைச் சேர்ந்த சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம் தொகுதியைச் சேர்ந்த வினோத் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல் திருவாடானை தொகுதியைச் சேர்ந்த ராஜீவ், கடலூர் தொகுதியைச் சேர்ந்த பி. ராஜ்குமார், அரக்கோணம் தொகுதியைச் சேர்ந்த வி. காந்திராஜ், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த பி. மதன் ராஜா, ராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்த கே. ஜெகதீஸ்வரி, கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த எஸ். ராஜேஷ் குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த எம். விஜய் பாலாஜி, இராசிபுரம் தொகுதியைச் சேர்ந்த டி. லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த ரமேஷ், மேலூர் தொகுதியைச் சேர்ந்த பி. விஸ்வநாதன் மற்றும் வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்த ஆர். குமார் ஆகியோரும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதனுடன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த கே. தென்னரசு, கோவை வடக்கு தொகுதியைச் சேர்ந்த வி. சம்பத் குமார், அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த ஜே. முகமது ஃபர்வாஸ், தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த டி. சரத்குமார், ஆர்.கே. நகர் தொகுதியைச் சேர்ந்த என். மரிய வில்சன் மற்றும் கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த கே. விக்னேஷ் ஆகியோரும் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இந்த புதிய அமைச்சரவை விரிவாக்கம் மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. புதிய அமைச்சர்களுக்கு எந்த துறைகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.