மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, இன்று

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை பற்றிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போழுது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை பற்றிய நிலையால அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தை தவிர்த்து, பிறமாநிலங்களில் எய்ம்ஸ் அமைப்பதில் தற்போதைய நிலை என்ன? எனவும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவ. 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.