சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் ஏப்ரல் 23-ஆம் தேதிநடைபெறவுள்ளது . தேர்தல் நெருங்கி வரும் சூழல் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே, நேற்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரம்பூர் தொகுதியை தொடர்ந்து அடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதையொட்டி, அன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி, தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் திருச்சி காவல் ஆணையர் காமினியிடம் மனு அளித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, அன்றைய தினம் பிரச்சாரத்தைத் தொடங்க தவெக திட்டமிட்டுள்ளது. எனினும், திருச்சி காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. விஜய் ரோடு ஷோ (வாகனப் பேரணி) மேற்கொள்ளக் கூடாது என்றும், பிரச்சாரம் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுமே பிரச்சாரம் அனுமதிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தவெக தரப்பு, பாதுகாப்பு கோரி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில், காவல்துறையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது. விஜய்யின் இரு தொகுதி வேட்பாளர் பதிவும், தவெகவின் தேர்தல் உத்தியில் முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.ஏப்ரல் 2-ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, விஜய் அன்று மாலை வரை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
