2 தொகுதியில் போட்டியிடும் விஜய்! பிரேமலதா சொன்ன பதில்!

இந்த முறை விஜய் ஏன் போட்டி போடுறாருன்றது விஜய் தான் இதுக்கு பதில் சொல்லணும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது “அது நீங்க விஜய்கிட்ட கேட்க வேண்டியதை ஏன் என்கிட்ட கேட்கிங்க? என்ன சார் இது? இல்ல இல்ல. இது வந்து நீங்க விஜய்கிட்ட கேட்கணும்ங்க. ஏன் ரெண்டு தொகுதியில் விஜய் போட்டியிடுறாருன்றது விஜய் தான் இதுக்கு பதில் சொல்லணும்.

என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்ல? ஏற்கனவே எவ்ளோ பேர் போட்டி போட்டு இருக்காங்களே. ரெண்டு தொகுதியில, இந்த முறை விஜய் ஏன் போட்டி போடுறாருன்றது விஜய் தான் இதுக்கு பதில் சொல்லணும். இல்ல அவர் பேச மாட்டார். Pressகிட்டனா அவங்க கட்சியில் இருக்கிறவங்ககிட்ட இதைக் கேட்டு நீங்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தொகுதி ஒதுக்கீடு குறித்து (குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் ஒதுக்கப்படுவது) கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதிலளித்தார் “பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கீடு பண்ணா தொடர்ந்து உங்களை விமர்சிக்கிறாங்க. அதற்கான காரணம் என்ன? யார் விமர்சிக்கிறாங்க? எந்தச் சமூகம்? எந்த சமூக வலைத்தளம்? அதுல யாருமே எங்ககிட்ட இதுவரைக்கும் அதைப் பத்தி பேசல. நீங்கத் தான் first அத பத்தி கேக்குறீங்க. புரியுதுங்களா?

தேமுதிகவை பொறுத்தவரைக்கும் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. யாருக்கு சீட் கொடுத்திருக்கோம்? எங்களுடைய முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்திருக்கோம். Seniorsக்கு கொடுத்திருக்கோம். எங்க மாவட்ட செயலாளர்களுக்குக் கொடுத்திருக்கோம். பாக்க அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். So எதுவுமே நீங்கக் குற்றமாவே பார்த்தா குற்றமாதான் தெரியும். எங்க யாருமே இந்தக் question என்கிட்ட கேக்கல. புதுசா நீங்கக் கேக்குறீங்க. அப்படி எதுவுமே கிடையாது.” என்றும் பேசினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது பிரேமலதா பதிலளித்தார்“இல்ல. அது தான் நான் தெளிவா நேத்தே சொன்னேன். அதையே தான் திருப்பிக் கேக்குறீங்க. அவர் ஒரு முதலமைச்சர் வேட்பாளர். வந்தால் என்ன revolutionary change தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவார் என்பதா அவரோட speechல இருக்கணும். அதான் மக்கள் எதிர்பார்க்கிறாங்க. அதை விட்டுட்டு மூணாம் கட்ட பேச்சாளர் மாதிரி அவர் பேசுறது தான் எனக்கு வருத்தம் குடுக்குது.அண்ணே அப்படி பேசாதீங்க. நீங்க ஒரு முதலமைச்சர் வேட்பாளர். நீங்க வந்து உங்களுடைய அந்த அரசியல் மாண்பு கண்ணியத்தோட பேசுங்க அப்படின்னு நான் எல்லா press meetலயும் சொல்லிக்கிட்டு வர்றேன்" எனவும் பிரேமலதா தெரிவித்தார்.