நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக பங்கீடு குறித்தும், அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில், தற்போது இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் தொகுதி வாரியாக கருத்து கேட்டு வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்க […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..! இந்நிலையில் தற்போது மறைந்த விஜயகாந்த் அவர்களின் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த […]
மறைந்த விஜயகாந்தின் உருவப்படத்தை அவரின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா இன்று கட்சி அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளார். திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்ந நிலையில், தேமுதிக அலுவலகத்தில் மறைந்த தேமுதிக […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தருமபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொணட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து, தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வரும் சமயத்தில், ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பாதுகாப்பில் குளறுபடி இருப்பதை தான் காட்டுகிறது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம், ரவுடிசம் தலை […]
சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல். தேமுதிக அதிமுகவில் இருந்து விலகி, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிடிவி தினகரனின் அமமுகவுடன் கைகோர்த்து. அந்த கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக சட்டப்பேரவையில் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது. இதனிடையே, நாளையுடன் வேட்புமனு தாக்கல் தேதி நிறைவடைவதை தொடர்ந்து, விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். […]
கூட்டணி குறித்து தலைமை தாங்கும் அதிமுகவை தான் கேட்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் […]
சென்னையில் தேமுதிகவின் கொடிநாளையொட்டி பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரத்தை தொடங்கினார் தலைவர் விஜயகாந்த். தேசிய முன்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் விழா இன்று பிப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் அவருடைய ரசிகர் மன்றத்தை தொடங்கியபோது இந்த நாளில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2005ம் ஆண்டு தேமுதிகவாக மாற்றப்பட்ட பின்னரும் ரசிகர் மன்றத்தின் கொடிதான் என்று இருந்த நிலையில், கொடி நாள் நிகழ்வை விருங்கப்பாக்கம் இருக்கக்கூடிய […]
காலதாமதம் செய்யாமல் விரைந்து தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர் சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கட்சி ஆரம்பித்து 16 வருடம் ஆகியுள்ளது. கூட்டணி எனக்கு எப்போதுமே பிடிக்காது. தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் கூறியுள்ளார். ஆனால், எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி […]
“கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்.தேமுதிக செயற்குழு ,பொதுக்குழு கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு. அதிமுக […]
அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து […]
அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டவர் பழனிசாமி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன. இதனிடையே 2017 பிப்ரவரி 14 முதல் 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து இன்று […]
கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என கூறுவது காலதாமதத்திற்கு வழி வகுத்துவிடும். தேமுதிக பொறுத்தளவில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளது. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் […]
சசிகலா ஆரோக்கியத்துடன் விடுதையாகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீபெரம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையை அடுத்து சிக்கராயபுரத்தில் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்கள் விரும்பினால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஜெயலலிதா என்ற ஒருவருக்காக தன் வாழ்க்கையை […]
தேமுதிகவை பொறுத்தவரை முரசு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவகத்தில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில் , இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.விரைவில் […]
தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவகத்தில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு […]
எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பாக சென்னை மதுரவாயிலில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசுகையில்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எங்கு இருக்குமோ அங்குதான் வெற்றி இருக்கும். எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தொண்டர்கள் தான் கேப்டனை […]
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான் என்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரும் தேர்தல் தமிழகத்தின் முக்கிய தேர்தல், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் நிச்சயம் […]