சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், பெரம்பூர் தொகுதியில் நடத்திய பிரச்சாரத்தின்போது அதிக அளவில் தொண்டர்களை ஒன்று திரட்டியதாகக் கூறி, தவெக மாவட்டச் செயலாளர் சிவா மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர் விவேகானந்தர் தெருவில் நேற்று மாலை விஜய் பிரச்சாரம் செய்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், போக்குவரத்து நெரிசல் உருவானதாகவும் சிலர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், தவெக மாவட்டச் செயலாளர் சிவா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக தரப்பு இந்த வழக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய்யின் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் கூடியதால் சற்று நெரிசல் ஏற்பட்டதாகவும், இதைப் பெரிதுபடுத்தி அரசியல் எதிரிகள் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வழக்கை “அரசியல் பழிவாங்கல்” என்று விமர்சித்து வருகின்றனர்.விஜய்யின் பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக மேலும் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நேற்று நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி குமார் அளித்த புகாரில், விஷப் மீது பொருளாளர் காவல் நிலையத்தில், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்து உள்ளிட்டு 5 பிரிவுகளில் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஒலிபெருக்கிகளை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், தேர்தல் அதிகாரிகளின் வழிகாட்டுதலை மீறி சுமார் 30 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
