#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,டெல்லி, மும்பை,சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் நான்கு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அந்த வகையில்,சென்னையில் இன்று 32-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் உள்ளது.

தற்போது, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120.51 ஆகவும், டீசல் ரூ.104.77 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.115.12 ஆகவும், டீசல் ரூ.99.83 ஆகவும் மாற்றமின்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:

தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள்RSPDealer Code-ஐ 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள்RSP Dealer Code-ஐ 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம். அதைப்போல்,HPCL நுகர்வோர்HPPrice Dealer Codeஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.