சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தின் 10.5% உள்ளாட்சி இட ஒதுக்கீடு விவகாரத்தில் தொடர்ந்து ஆவேசமாக பேசி வருகிறார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்புமணி, “இது ஜாதி பிரச்சனை கிடையாது, சமூக நீதி பிரச்சனை. யாருக்கு இல்லையோ அவங்களுக்கு கொடுங்க” என்று கூறி, இட ஒதுக்கீட்டை சமூக நீதியின் அடிப்படையாக வலியுறுத்தினார்.
மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழா அல்லது சமூக நீதி தொடர்பான நிகழ்ச்சிகளில் “சமூக நீதி” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விமர்சித்து, உண்மையான செயல்பாடு தேவை என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மாலை அணிவிக்க தெரிந்த முதல்வருக்கு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மனமில்லை” என்று விமர்சித்தார். இது பாமகவின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது, மேலும் அரசு இதை அமல்படுத்தாவிட்டால் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்தார்.
