ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.35,000க்கு கீழ் சென்றது!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.34,984க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரத்தின்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.34,984க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.18 குறைந்து, ரூ.4,373க்கு விற்பனையாகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,200க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.35,040க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.4,380க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.68.70க்கு விற்பனை செய்யப்பட்டது.