கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடைவிதிக்க கோரிய மனுவை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடைவிதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.ஆனால் மனுவை ஏற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டது.