புதுச்சேரி மதுபானம் எடுத்து வரும் விவகாரம்...நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Hero Image

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு “தனி நபர் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் வரை விலக்கு” அளிக்கும் நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது“தனி நபர் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் வரை விலக்கு அளிக்கும் உத்தரவு, புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது. இந்த விலக்கு, அரசு உரிமம் பெற்ற மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளின்படி, புதுச்சேரியில் இருந்து வரும் மதுபானங்கள் மீது இந்த விலக்கு பொருந்தாது. நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.” எனவும் தெரிவித்தார்.

இந்த வழக்கை நாளை (ஏப்ரல் 29, 2026) விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரப்படும் மதுபானங்கள் மீது சோதனை மற்றும் வரி விதிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.