புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிக்கையில் ” மத்திய அரசு விடுமுறை தினமான 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு […]
புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை (30.10.2024) அன்று பொது விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3 […]
புதுச்சேரி: நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 60 மீட்புப்படை குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக, […]
புயல் எச்சரிக்கை : வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறிய நிலையில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (19.07.2024) காலை 0530 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். ரூ. 491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் புதிதாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஜனவரி 22-ம் தேதி (அதாவது நாளை) அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை பிற்பகல் 2:30 மணி வரை இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும் எனவும் சிறப்பு கிளினிக்குகள் […]
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு. புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் […]
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது அம்மாநில அரசு. புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை என அறிவிப்பு. மொகரம் பண்டிகையையொட்டி நாளை புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறைக்கு பதில், வரும் 20-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து,ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுச்சேரி சென்று அங்கு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் அமித்ஷா பங்கேற்றார்.இதனையடுத்து,அரவிந்தர் ஆசிரமம்,மகாகவி பாரதியார் வாழ்ந்த […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார்.அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில்,ஆவடியில் இருந்து இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுச்சேரி செல்கிறார். பின்னர்,அங்கு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் அமித்ஷா பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து,அரவிந்தர் ஆசிரமம்,மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிடுகிறார்.அதே […]
பிரான்ஸ் நாட்டின் 12 வது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 12 பேர் பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.இந்தநிலையில் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் வாக்களிக்கும் வகையில் பிரெஞ்ச் தூதரகம் வாக்குபதிவு மையங்களை அமைத்துள்ளது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் 4,564 பிரஞ்சு வாக்காளர்கள் உள்ளனர். தற்போது புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியில் பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு […]
புதுச்சேரியில் ஏப்.13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த கடற்கரை திருவிழாவில் கடற்சார்ந்த விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலைநாட்டு இசை நிகழ்ச்சிகள் ஆகவே நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:ஜன.31 வரை அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு! கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தை தொடர்ந்து, அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக,1-9 ஆம் வகுப்புகள் வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். […]
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. புதுச்சேரி அரசு சார்பில் ரூ.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (12.01.2022) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். சுமார் 1,000 பேர் அமரும் வசதி கொண்ட இந்த மண்டபம் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுச்சேரியில் ரூ.122 கோடி முதலீட்டில் […]
அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் (10-01-2022) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் […]
டிசம்பர் 6 முதல் புதுச்சேரியில் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் […]
3 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த ஒன்றாம் தேதி புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வில், திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]