அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது

this news gives information about The income tax department sent the Minister RP Uthayakumar-amaisar r.p udhayakumarukku varumanavari

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதி உள்ளன. இந்த விடுதியில்  நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பணம் அதிக அளவில்  இருப்பதாக வந்த தகவலின் படி  இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் சில துண்டு சீட்டுகள் மற்றும் வெற்றுப்பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பில்  இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.