அண்ணனை அடக்கம் செய்ய சென்ற தம்பி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

The death of the brother who went to bury the deceased brother. Police investigating.

உயிரிழந்த அண்ணனை அடக்கம் செய்ய சென்ற தம்பி உயிரிழப்பு.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர்.

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தொட்டியார் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் 72 வயது முதியவர் கருணாநிதி. இவரது அண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தனது அண்ணனின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற கருணாநிதி இறுதி சடங்கு முடிந்ததும் மயானத்திலிருந்து உறவினரின் மோட்டார் பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார்.அதன் பின்பு சிறிது தூரம் நடந்து வந்த கருணாநிதி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்பொழுது அங்கு இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருணாநிதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து கூடலூர் தெற்கு காவல் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அண்ணனின் இறுதிச்சடங்கிற்காக சென்ற தம்பி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.