பாஜக கூட்டணியில் தொடர்ந்து தொல்லை!!அதனால் திமுகவிற்கு ஆதரவு!!பாரிவேந்தர்

The BJP is continuously troubled in the coalition and so is the support of the DMK! paajaka koottaniyil thodarnthu thollai

திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்துக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் சென்றார்.அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

unknown node

இதன் பின்னர் அவர் கூறுகையில்,மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இருப்பதால் அந்த கூட்டணியில் ஐஜேகேவால் தொடரமுடியாது.

தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஸ்டாலினால் தான் தரமுடியும்.பாஜக கூட்டணியில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்து வந்தோம் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.