ஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம்! முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்! – கே.எஸ்.அழகிரி

Spirituality will be taken in Tamil Nadu, but not political spirituality, spirituality is a confusing thing, Rajini must first make it clear.

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும், கடந்த சில நாட்களாகவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக உடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால், ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது  என்றும், தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.