பாலியல் தொல்லை – பள்ளி தாளாளரை சிறையில் அடைக்க உத்தரவு!
பாலியல் தோலை புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைப்பு.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவையடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டார் வினோத்.
கவுன்சிலின் தருவதாக திருநின்றவூர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக தாளாளர் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்பின், பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு தலைமைறைவான தாளாளர் வினோத் கோவாவில் கைது செய்தது போலீஸ். கோவாவில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தனிப்படை காவல்துறை.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் வினோத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தாளாளரை கண்டித்து நேற்று முன்தினம் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.