எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!

எஸ்.பி.பி யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று பிற்பகல் உயிழந்தார். பின்னர்,அவரது உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
பின்னர், தமிழக அரசு சார்பில் ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 24 போலீசாரால் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு மரியாதை செலுத்தினர்.
இறுதியாக எஸ்.பி.பி யின் உடல் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025