வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று சத்யபிரத சாகு நடத்தும் 2 வது நாள் ஆலோசனை...!

Sathyapratha Sahoo 2nd-day consultation today regarding the counting of votes.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாகு,வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,காணொளி வாயிலாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் போன்றோர் பங்கேற்கின்றனர்.

ஆனால் ஏற்கனவே,வாக்கு எண்ணிகையை பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து,நேற்று தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.அதனைத் தொடர்ந்து,இன்று இரண்டாவது நாளாகவும் ஆலோசனை நடத்த சத்யபிரத சாகு திட்டமிட்டுள்ளார்.