சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Default Image

சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர்,இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது.

நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8 வழிச்  சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று இன்று முடிந்ததைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களையும் 1 வாரத்தில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்