எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

Sahitya Akademi Award for Writer Arrow for his collection of short stories, A Green Bird with a Red Neck.

சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.

2021-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு (சிஎஸ் லட்சுமி) அறிவிக்கப்பட்டுள்ளது. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதைக்காக அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான அம்பை 1960-லிருந்து எழுதி வருகிறார். இதுபோன்று எழுத்தாளர் மு.முருகேஷ்க்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்புக்காக மு.முருகேஷ்க்கு பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. கவிதை,ஹைக்கூ, சிறுகதை தொகுப்பு என பல்வேறு இலக்கியங்களை மு.முருகேஷ் படைத்துள்ளார்.