சென்னை :தமிழ்நாட்டில் கிராமங்களில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு (தூய்மை காவலர்கள்) சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரம் செய்மதற்காக வெளிநிரவங் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) மூலமாக தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பார்வையில் கண்ட கடிதத்தில் தூய்மை காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது. தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node