சிறைக்கைதிகளுடன் மீண்டும் சந்திப்பு -சிறைத்துறை அறிவிப்பு..!

It is said to start again from the 14th. Thus, it will be allowed on days other than Saturday, Sunday and public holidays.

கொரோனா வைரஸ் காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா  வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சிறைக்கைதிகளை நலனையும் கருத்தில் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பார்வையிட அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 14-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என கூறப்படுகிறது.  இதனால், சனி , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேர்காணல் தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். மாதத்துக்கு ஒரு குடும்பம் நேர்காணல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், சிறைக்கைதிகளை பார்க்கவருபவர்களுக்கு உடல்நிலையை சோதனை, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகத்துடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து நேர்காணல் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.