புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர் என சங்கர் ஜிவால் பேட்டி.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்; தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர். புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.