100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய தோனியின் வழக்கு தள்ளிவைப்பு …!

Default Image

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மான நஷ்டமாக 100 கோடி ரூபாய் கோரிய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில், இதன் அடிப்படையில் ஜீ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்சிங் செய்ததாகவும், சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக இடைத்தரகர்களின் சாட்சியம் அளிக்கப்பட்டதாகவும், தோனியை காப்பாற்றும் நோக்கில் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைப்பதற்கு முத்கல் கமிட்டி கண்டித்ததாகவும் இவற்றை மறைத்து டோனி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை. கிரிக்கெட் சூதாட்டத்தின் அடித்தளமாக மாறி வருகிறது. அது போல தான் சமீபத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோனி மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை எனவும், கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இந்த விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஆனால் ஊடகங்களின் குரல் வளையை நெறிக்க தோனி வழக்கு தொடர்ந்துள்ளதற்கு அபராதத்துடன் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி அவர்கள், தனி மனித உரிமை பாதிக்காமல் கருத்து சுதந்திரம் என்ற உரிமை இருக்க என தெரிவித்துள்ளனர். மேலும், தோனி தொடர்ந்த வழக்கை வரையறுப்பதற்காக இந்த வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்