பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டம்: இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

Pongal festival approaches, Chief Minister Palanisamy will inaugurate the Pongal gift scheme at the General Secretariat this evening.

பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கப்படும் என்றும், இதனுடன் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு,திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்குரூ.2,500 உடன் கூடியபொங்கல்பரிசுவழங்கும் திட்டத்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.