பொள்ளாச்சி பாலியல் விவகாரம்:விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன் -பார் நாகராஜ்

Pollachi's Sexual Affairs: I have answered all the questions in the investigation -Par Nagaraj

விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன் என்று  பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை சிலர் மிரட்டியதாக  ஜோதி நகர் பார் நாகராஜ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.

பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

unknown node

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிபிசிஐடி போலீசாரிடம் பார் நாகராஜ்  ஆஜராகி விளக்கம் அளித்தார்.இதன் பின்னர் பார் நாகராஜ்  கூறுகையில்,விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்.மீண்டும் விசாரணை தேவைப்பட்டால் அழைப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர் என்று  பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.